/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் திட்டால் கால்வாய் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
மண் திட்டால் கால்வாய் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
மண் திட்டால் கால்வாய் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
மண் திட்டால் கால்வாய் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : டிச 13, 2025 05:50 AM

காரப்பேட்டை:வடிகால்வாய்களில் மழைநீர் வெளியேற தடையாக உள்ள மண் திட்டுகள் மற்றும் குப்பையை அகற்ற வேண்டும் என, காரப்பேட்டை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காரப்பேட்டையில் சாலையின் இரு ஓரங்களிலும், கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப் பட்டுள்ளது.
அரசு புற்றுநோய் மருத்துவமனை அருகில், கால்வாய் மீது போடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் உடைந்து, கால்வாயில் விழுந்துள்ளது.
திறந்து கிடக்கும் கால்வாயில் மண் திட்டுகளாலும், குப்பை குவியலாலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, அப்பகுதியை மழைநீர் சூழும் நிலை உள்ளது.
எனவே, வடிகால்வாயில் உள்ள அடைப்புகளை நீக்கவும், சரிந்து விழுந்துள்ள கான்கிரீட் சிலாப்புகளை சீரமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.