ADDED : பிப் 01, 2025 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் காவல் உதவி ஆய்வாளர் அரிதாஸ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் கட்டவாக்கம் ஜங்ஷன் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடபட்டிருந்தனர். அப்போது, அச்சாலை வழியாக 3 யூனிட் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.
இதில், லாரியில் மண் எடுத்து வர உரிய நடைசீட்டு இல்லாதது தெரியவந்தது. அதை தொடர்ந்து, லாரி ஓட்டுனர் தப்பியோடினார். போலீசார் லாரியை பறிமுதல் செய்து, வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.