/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு பாலம் இணைப்பு சாலையில் சூரிய ஒளி எச்சரிக்கை விளக்கு அமைப்பு

ADDED : ஜூன் 09, 2025 11:36 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு பாலாறு உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலையுடன், கீழம்பி செல்லும் புறவழிச்சாலையும், அருகில் டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளன.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இப்பகுதியில் வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்க, தானியங்கி போக்குவரத்து எச்சரிக்கை விளக்கு அமைக்க வேண்டும் என, காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், செவிலிமேடு பாலாறு உயர்மட்ட இணைப்பு சாலையுடன், கீழம்பி புறவழிச்சாலை இணையும் இடத்தில், இருவழித் தடங்களிலும் சூரிய ஒளி, எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.