தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கரும்பில் செவ்வழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

 கரும்பில் செவ்வழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

 கரும்பில் செவ்வழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு


ADDED : பிப் 04, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க ரும்பு சாகுபடியில், செவ்வழுகல் நோயை கட்டுப்படுத்தலாம் என, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:

கரும்பு சாகுபடியில், செவ்வழுகல் நோய் தாக்கம் ஏற்படும். இந்த நோய், மண் மற்றும் காற்று மூலமாக பரவக்கூடிய தன்மை உடையது.

இந்த செவ்வழுகல் நோய் தாக்கிய கரும்பை இரண்டாக பிளந்து பார்க்கும் போது, சிவப்பு நிற கோடுகள் காணப்படும். நாளடைவில், இனிப்பு கரைந்து ஒரு விதமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

இதை கட்டுப்படுத்துவதற்கு, வயலை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கரும்பு தோகை உரிந்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஜீவமிர்த்த கரைசல் தெளிக்கலாம்.

அதற்கு ௧ கிலோ பேசிலஸ் கலவையுடன், 25 கிலோ தொழு உரம் கலந்து, மண்ணில் போட வேண்டும். ஏழாவது மாதத்தில், ௧ ஏக்கர் கரும்பு பயிருக்கு, 400 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு நீரில் கரைத்து, பாசனத்தில் அளிக்கலாம்.

இதற்கு கட்டுப்படவில்லை எனில், புரப்பிகோனசோல் தேவைக்கு ஏற்ப கலந்து தெளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு - செ.சுதாஷா, 97910 15355

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us