/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு 5 இடங்களில் புதிய மின்மாற்றி
/
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு 5 இடங்களில் புதிய மின்மாற்றி
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு 5 இடங்களில் புதிய மின்மாற்றி
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு 5 இடங்களில் புதிய மின்மாற்றி
ADDED : செப் 24, 2024 10:08 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லாசத்திரம், பஞ்சுபேட்டை பெரிய தெரு, ஒலிமுகமதுபேட்டை நான்கு முனை சந்திப்பு, அம்பாள் நகர், கங்கையம்மன் கோவில் உள்ளிட்ட பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்விசிறி, மிக்ஸி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
எனவே, இப்பகுதிகளுக்கு என, புதிதாக ‛டிரான்பார்மர்' எனப்படும் மின்மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மொத்தம் 15.86 லட்சம் ரூபாய் செவிவில், 5 மின்மாற்றிகள் அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், புதிதாக அமைக்கப்பட்ட ஐந்து மின்மாற்றிகளையும், நேற்று மாலை, இயக்கி வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.