/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் சோமநாதபுரம் சுகாதார நிலையம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் சோமநாதபுரம் சுகாதார நிலையம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் சோமநாதபுரம் சுகாதார நிலையம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் சோமநாதபுரம் சுகாதார நிலையம்
ADDED : செப் 05, 2024 11:27 PM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரத்தை சுற்றி ஆணைப்பள்ளம், மல்லிகாபுரம், கள்ளமா நகர், காக்கநல்லூர், திருப்புலிவனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியினர், மருத்துவ சிகிச்சைக்காக உத்திரமேரூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால், சோமநாதபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, 2023 - 24ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், சோமநாதபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுமான பணி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கட்டடம் வீணாகி வருகிறது.
எனவே, சோமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.