/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
28ல் சொர்ண காமாட்சி ஜன்ம நட்சத்திர விழா
/
28ல் சொர்ண காமாட்சி ஜன்ம நட்சத்திர விழா
ADDED : அக் 25, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, சொர்ண காமாட்சி அம்பாள் கோவில் உள்ளது. அம்பாளின் ஜன்ம நட்சத்திர பூஜை, வரும் 28ல் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 7:00 அளவில் கோ பூஜையுடன் துவங்குகிறது. பகல் 11:00 மணியளவில் பூர்ணாஹூதி மற்றும் நவவிதமான மலர் அலங்காரம் நடைபெற உள்ளது.
மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.