/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்மண்டல கராத்தே போட்டி 300 சிறுவர் -- சிறுமியர் அசத்தல்
/
தென்மண்டல கராத்தே போட்டி 300 சிறுவர் -- சிறுமியர் அசத்தல்
தென்மண்டல கராத்தே போட்டி 300 சிறுவர் -- சிறுமியர் அசத்தல்
தென்மண்டல கராத்தே போட்டி 300 சிறுவர் -- சிறுமியர் அசத்தல்
ADDED : ஜன 29, 2024 04:30 AM

சென்னை : சென்னை, கோடம்பாக்கத்தில் நடந்த தென்மண்டல அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 300-க்கும் மேற்பட்ட சிறுவர் - -சிறுமியர் பங்கேற்றனர்.
அகில இந்திய 'டூ கோஜு ரியோ' சங்கம் சார்பில், குடியரசு தின கோப்பைக்கான, 3வது தென் மண்டல கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட சிறுவர் - -சிறுமியர் பங்கேற்றனர்.
'கட்டா, குமிட்' மற்றும் குழு அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
ஐந்து வயது முதல் 17 வயது வரை மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டோர் என, வயது அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு,'டூ கோஜு ரியோ' சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் கோஷி ஈஸ்வர், போட்டி ஒருங்கிணைப்பு செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.