/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
/
வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : நவ 10, 2024 07:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பருவமழை உரிய காலத்தில் மழை பொழிவு இல்லாமல், பல்வேறு எதிர் வினைகளுடன் அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் என, மாறுபட்ட பருவநிலையில், மழை பெய்து வருகிறது.
இதனால், காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் ஏரிக்கரை, உக்கம்பெரும்பாக்கத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், உலக மக்களின் நன்மை கருதியும், பருவ மழை காலத்தில் சீரான மழை பெய்ய வேண்டியும், கோவிலில் உள்ள சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான வருண பகவானுக்கு நேற்று, காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.