/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'உழவரைத் தேடி வேளாண்மை' சிறப்பு முகாம் துவக்கம்
/
'உழவரைத் தேடி வேளாண்மை' சிறப்பு முகாம் துவக்கம்
ADDED : மே 29, 2025 09:47 PM
வாலாஜாபாத்:உழவர் நலத்துறை சார்பில், 'உழவரை தேடி வேளாண்மை' என்கிற சிறப்பு திட்ட முகாமில், உழவர்களை சந்திக்க குழு அமைக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள விவசாயிகளை அக்குழுவினர் நேரடியாக சந்திக்கின்றனர்.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், 'உழவரை தேடி வேளாண்மை' திட்ட முகாம் நேற்று நடந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இம்முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகளை சந்தித்து வயல்வெளி பாதுகாப்பு, சாகுபடி மகசூல் குறித்து விளக்கம் அளித்தனர்.
பயிர்களுக்கு தேவையான இடுப் பொருட்கள், உரம், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் முறை மற்றும் கோடைக்கால பயிர்கள், தரிசுநில மேம்பாட்டு முறை போன்றவை குறித்தும் விளக்கம் அளித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
வாலாஜாபாத் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் லட்சுமி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், புத்தகரம் ஊராட்சிமன்ற தலைவர் நந்தகோபால் ஏற்பாட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
* உத்திரமேரூர் ஒன்றியம், ஒட்டந்தாங்கல் ஊராட்சியில், உழவரை தேடி வேளாண்மை திட்ட துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அல்லிபாபு முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு துறை ஆகியோர் குழுவாக கிராமங்களுக்கு சென்று, உழவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை வழங்க உள்ளனர்.
இதேபோல, மலையாங்குளம் ஊராட்சியிலும் உழவரை தேடி வேளாண்மை திட்ட துவக்க நிகழ்ச்சி நடந்தது.