ADDED : டிச 18, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்: ஊத்துக்காடு ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் அவர்களுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட 48 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற, இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் சாவித்திரி தலைமை தாங்கினார்.
இதில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சுமுத்து மற்றும் இயன்முறை மருத்துவர் முகமது அனிபா உள்ளிட்டோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கினர். அரசு பணிகளில் இட ஒதுக்கீடு, இலவச வீட்டுமனை பட்டா போன்றவை குறித்தான சட்ட உதவிகள் பெறுவதற்குமான ஆலோசனைகள் இம்முகாமில் வழங்கப்பட்டன.

