/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மோட்டார் வாகன விபத்துகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு
/
மோட்டார் வாகன விபத்துகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு
மோட்டார் வாகன விபத்துகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு
மோட்டார் வாகன விபத்துகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு
ADDED : ஆக 14, 2025 11:19 PM
காஞ்சிபுரம்:மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க, காஞ்சிபுரத்தில் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் தாலுகா வளாகத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன விபத்துக்கான வழக்குகளை, மாவட்ட நீதிமன்றத்திலேயே நீதிபதிகள் கூடுதலாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், வாகன விபத்துக்கான வழக்குகளை மட்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் துவக்கவிழா நிகழ்ச்சி, நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
'வீடியோ கான்ப ரன்ஸ்' மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா தலைமையில், நீதிமன்றத்தை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் திறந்து வைத்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் சவுந்தர் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
மோட்டார் வாகன விபத்துக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜெயஸ்ரீ பொறுபேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா, தலைமை குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், சார்பு நீதிபதி அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருமால், கலெக்டர் கலைச்செல்வி, வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
மோட்டார் வாகன விபத்துகளுக்கான வழக்குகள், சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக விசாரிக்கப்பட உள்ளது.