/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4.22 லட்சம் வாக்காளர்களுக்கான சிறப்பு தீவிர திருத்த முகாம் துவக்கம்

ADDED : நவ 05, 2025 02:26 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 4.22 லட்சம் வாக்காளர்களுக்கான சிறப்பு தீவிர திருத்த முகாம் துவங்கியது.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 4.22 லட்சம் வாக்காளர்களுக்கான சிறப்பு தீவிர திருத்த முகாம் நேற்று துவங்கியது.
கணக்கெடுப்பு பணியில், 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கே நேரடியாக சென்று, வாக்காளர்கள் பற்றிய சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், களியனுாரில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கினார். டிச., 4ம் தேதி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.