/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி
/
சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி
ADDED : நவ 07, 2024 12:53 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், சிறப்பு மாணவர்களுக்கான, சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி நடந்தது.
இதில், 8 -- 21 வயதுடையோர் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டியில் 90 பேர் பங்கேற்றனர்.
சிறப்பு ஒலிம்பிக் பாரத், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சுபா ரவிசங்கர், துணைத் தலைவர் மூர்த்தி, செயலர் குமரன், பொருளாளர் பியூலா உள்ளிட்டோர் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் பரிசு வழங்கினர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.