/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை அம்மன் கோவில்களில் விமரிசை
/
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை அம்மன் கோவில்களில் விமரிசை
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை அம்மன் கோவில்களில் விமரிசை
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை அம்மன் கோவில்களில் விமரிசை
ADDED : ஜூலை 19, 2025 12:31 AM

காஞ்சிபுரம்:ஆடி முதல் வெள்ளி கிழமையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல் விழா நடந்தது.
காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் 24ம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்று நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு, மேற்கு ராஜ வீதி வழியாக ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றது. அங்கு அம்மனுக்கு 108 குடம் பாலாபிேஷகம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
வெள்ளகுளம் சந்தவெளி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டும், அம்மனுக்கு கூழ்வார்த்தும் வழிபட்டனர்.
உற்சவர் சந்தவெளி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலை பரஞ்சோதியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது.