/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பள்ளியின் ஆண்டு விழா
/
கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பள்ளியின் ஆண்டு விழா
கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பள்ளியின் ஆண்டு விழா
கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பள்ளியின் ஆண்டு விழா
ADDED : ஏப் 18, 2025 08:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வித்யா பிரகாசம் அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியின் 23ம் ஆண்டு விழா நடந்தது.
இதில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் அமைச்சர் காந்தி, தன் சொந்த நிதியிலிருந்து, பள்ளி மாணவ- - மாணவியருக்கு 2 செட் பள்ளி சீருடைகளும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவ- - மாணவியர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர் காந்தி, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, சிறப்பு பள்ளி செயலர் மணிமேகலை, பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.