/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புரட்டாசி சனிக்கிழமை காஞ்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
புரட்டாசி சனிக்கிழமை காஞ்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை காஞ்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை காஞ்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 22, 2024 05:33 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சனி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாத முதல்வார சனிகிழமையான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள், வைகுண்ட பெருமாள், உலகளந்த பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோக்தகாரி பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிகிழமையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
காஞ்சிபுரம் செவிலிமேடு சாலை கிணறு, ராமானுஜர் சன்னிதியில், ராமானுஜர், நேற்று வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத பெருவிழாவின் முதல் சனிக்கிழமையான நேற்று காலை பிரந்த சேவை, சொற்பொழிவு, சிறப்பு அலங்கார தரிசனம் நடந்தது. மாலை பேசும் பெருமாள் வீதியுலா வந்தார். தொடர்ந்து பஜனை நிகழ்ச்சி நடந்தது.
உத்திரமேரூர் மேட்டு தெரு பஜனை கோவிலில், 27வது ஆண்டு புரட்டாசி மாத கருடசேவை உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கருடசேவை உற்சவம் நடந்தது.
இதில், அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.