ADDED : செப் 18, 2024 08:41 PM
காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அண்ணாதுரை மற்றும் ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, அக். 15ம் தேதியும், ஈ.வெ.ரா.,பிறந்தாளையொட்டி, அக்.,17ம் தேதியும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
வாலாஜாபாத் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்களுக்கு காலை 9:00 மணிக்கு போட்டிகள் துவங்கும்.
போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை தலைமையாசிரியர்களே தேர்வு செய்து அனுப்ப வேண்டும். கல்லுாரிகளில் முதல்வரே மாணவர்களை தேர்வு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும் தலைப்புகளின் கீழ் பேச்சு போட்டிகளில் பேச வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.