sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 மாணவ -- மாணவியருக்கு டிச., 1, 4ல் பேச்சு போட்டி

/

 மாணவ -- மாணவியருக்கு டிச., 1, 4ல் பேச்சு போட்டி

 மாணவ -- மாணவியருக்கு டிச., 1, 4ல் பேச்சு போட்டி

 மாணவ -- மாணவியருக்கு டிச., 1, 4ல் பேச்சு போட்டி


ADDED : நவ 20, 2025 04:18 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டிகள், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், டிச., 1 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, டிச., 1ம் தேதியன்றும், ஈ.வெ.ரா., பிறந்த நாளை ஒட்டி டிச., 4ம் தேதி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு என, தனித்தனியே பேச்சு போட்டிகள், காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ்., உயர் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

இப்போட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு காலை 9:00 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டியில், கல்லுாரிக்கு 2 பேர் வீதமும், பள்ளி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டியில், பள்ளிக்கு ஒருவர் வீதமும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

மேலும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ- - மாணவியருக்கும், கல்லுாரி மாணவ - -மாணவியருக்கும் தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாணவர்கள் அனைத்து தலைப்புகளையும் தயார் செய்து வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் தலைப்பையொட்டி பேச வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us