/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகத்தடை குறித்து எச்சரிக்கை குறியீடு பலகைகள் அமைப்பு
/
வேகத்தடை குறித்து எச்சரிக்கை குறியீடு பலகைகள் அமைப்பு
வேகத்தடை குறித்து எச்சரிக்கை குறியீடு பலகைகள் அமைப்பு
வேகத்தடை குறித்து எச்சரிக்கை குறியீடு பலகைகள் அமைப்பு
ADDED : பிப் 20, 2026 06:04 AM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கோனேரிகுப்பம், மூவேந்தர் நகர் பிரதான சாலையில் உள்ள வேகத்தடை இருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடு பலகைகள் அமைக்கப்பட்டு, ஒளிரும் பிரதிபலிப்பான் பொருத்தப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மூவேந்தர் நகர் பிரதான சாலை வழியாக ஏனாத்துார், வையாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், நான்கு முனை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் தீட்டப்படாமலும், இரவில் ஒளிரும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தப்படாமலும் உள்ளதால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர்.
எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், வேகத்தடை இருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில், சாலையின் இருபுறமும் எச்சரிக்கை குறியீடு பலகையும், இரவில் மின்விளக்கில் ஒளிரும் வகையில் ஒளி பிரதிபலிப்பானும் பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், வேகத்தடையின் மீது வெள்ளை நிற வர்ணம் தீட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

