/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழையால் பல்லாங்குழியான ஸ்ரீபெரும்புதுார் சாலைகள்
/
மழையால் பல்லாங்குழியான ஸ்ரீபெரும்புதுார் சாலைகள்
ADDED : அக் 16, 2024 12:58 AM

ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதை சுற்றியும் பகுதி சாலைகள் சேதமடைந்து உள்ளன.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவள்ளூர் செல்லும் சாலை, தொடர் மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், இவ்வாழியாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்லும் போது, பல்லாங்குழி சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி சார்பில், எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.