/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.ஆர்.எம்., வீரர் - வீராங்கனையர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
/
எஸ்.ஆர்.எம்., வீரர் - வீராங்கனையர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
எஸ்.ஆர்.எம்., வீரர் - வீராங்கனையர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
எஸ்.ஆர்.எம்., வீரர் - வீராங்கனையர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
ADDED : டிச 20, 2025 05:34 AM

சென்னை: தேசிய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் - வீராங்கனையர் அசத்தினர்.
இந்திய பல்கலை சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, பல்கலைகளுக்கு இடையிலான தேசிய நீச்சல் போட்டியை நடத்துகிறது. இதில், 'டைவிங்' மற்றும் நீச்சல் பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.
போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நீச்சல் குள வளாகத்தில் நடக்கின்றன.
இதில் நேற்று முன்தினம் நடந்த மாணவியருக்கான 'ஹை போர்டு டைவிங்' பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி பாலக் சர்மா முதல் இடம் பிடித்து அசத்தினார்.
மாணவர்களுக்கான 'ஹை போர்டு டைவிங்' பிரிவில் எஸ்.ஆர்.எம் ., பல்கலையின் ஸ்ரீகணேஷ் பிரசாந்த் தங் கம் கைப்பற்றி அசத்தினார். எஸ்.ஆர்.எம்., பல் கலையின் மற்றொரு வீரரான சர்வேஷ் மூன்றாவது இடத்தை கைப்பற்றினார்.
மாணவர்களுக்கான 100 மீ., பட்டர்பிளை பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பெனடிக்டன் ரோகித் முதலிடம் பிடித்தார்.
மாணவருக்கான 400 மீ., ப்ரீஸ்டைல் ரிலே போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை நித்திக் நாதெல்லா, யாதேஷ் பாபு, பெனடிக்டன் ரோகித், ஆதித்யா தினேஷ் ஆகியோர் போட்டி துாரத்தை 3:32.46 நிமிடங்களில் கடந்து, முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

