/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
/
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்
ADDED : நவ 11, 2025 11:27 PM

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள், 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான, அகில இந்திய அக்குவாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் உள்ள பாரிவேந்தர் நீச்சல் குளத்தில் நடந்தது.
இதில் 50, 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 50, 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக், 200 மீட்டர் தனிநபர் மெட்லே, 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் உட்பட எட்டு பிரிவுகளில், நீச்சல் போட்டிகள் நடந்தன.
இதன் பெண்கள் பிரிவு, 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் எஸ்.ஆர்.எம்., வீராங்கனை பவித்ராஸ்ரீ, போட்டி துாரத்தை 1:24:62 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.
ஆண்களில் எஸ்.ஆர்.எம்., வீரர் ஜெயசூரியா, போட்டி துாரத்தை 1:12:53 நிமிடத்தில் கடந்து முதலிடத்தை வென்றார்.
தொடர்ந்து, ஆண்கள் 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் யதேஷ் பாபு, போட்டி துாரத்தை 1:08:85 நிமிடத்தில் கடந்தார். அதேபோல் பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ரக் ஷனா, போட்டி துாரத்தை 1:30:31 நிமிடத்தில் கடந்து அசத்தினார்.
ஆண்கள் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைலில், அதே பல்கலையின் கவீன் ராஜ், போட்டி துாரத்தை 55:68 விநாடியிலும், இதன் மகளிர் பிரிவில் ரக்ஷனா, 1:13:30 நிமிடத்திலும் கடந்து, முதலிடம் பிடித்து அசத்தினர்.
எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் - வீராங்கனையர், மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றினர்.

