/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிகளுக்கு இடையிலான தடகளம் செயின்ட் ஜோசப் கார்டன் 'சாம்பியன்'
/
பள்ளிகளுக்கு இடையிலான தடகளம் செயின்ட் ஜோசப் கார்டன் 'சாம்பியன்'
பள்ளிகளுக்கு இடையிலான தடகளம் செயின்ட் ஜோசப் கார்டன் 'சாம்பியன்'
பள்ளிகளுக்கு இடையிலான தடகளம் செயின்ட் ஜோசப் கார்டன் 'சாம்பியன்'
ADDED : பிப் 16, 2024 11:11 PM

சென்னை:எஸ்.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி, சேத்துப்பட்டு நேரு பார்க் மைதானத்தில் நடந்தது. இதில், 87 பள்ளிகள், 18 அகாடமிகளில் இருந்து, 1,500க்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், மழலையர் வகுப்பான ப்ரீ.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், 4 x 100 ரிலே, ஹூப்ஸ் ரன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி ப்ரி.கே.ஜி., மாணவி இவானா, 25 மீ., ஓட்டத்தில் தங்கம், 40 மீ., வெண்கலம், ஹூப்ஸ் ரன்னில் தங்கம்; எல்.கே.ஜி., ஜெய்னா 25 மீ., வெள்ளி; 40 மீ., வெள்ளி; ஹிருத்திக் 25 மீ., தங்கம், 40 மீ., வெண்கலம் பதக்கங்களை வென்றனர்.
மூன்றாம் வகுப்பு மாணவி மித்ரா சாயபுர்வா 25 மீ., வெண்கலம்; ஆறாம் வகுப்பு சுபாஷ் 100 மீ., வெண்கலம், பெண்கள் 4X100 ரிலேவில் நிவிதா, ஹரிணி, அபிஸ்ரீ, ஹேமானி ஆகியோர் தங்கம் வென்றனர். ஏழாம் வகுப்பில், 4 x 100 ரிலேவில், கீர்த்தனா, ஸ்ரீமதி, அக்ஷ்யா, விகாஷினி ஆகியோர் தங்கம் வென்றனர்.
அனைத்து போட்டிகள் முடிவில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி மாணவர்கள், 11 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களை வென்று, சாம்பியன் பட்டம் வென்றனர்.