/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 692 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 692 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 692 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 692 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 23, 2025 12:22 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 692 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
வாலாஜாபாத் பேரூராட்சியில், 7 வார்டுகளுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' முதற்கட்ட முகாம் நேற்று தனியார் மண்டபத்தில் நடந்தது.
முகாமிற்கு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பழனி குமார் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தனர். 1, 2, 3 மற்றும் 8, 9, 10, 13 ஆகிய ஏழு வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமைத்தொகை, மனை பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில் மொத்தமாக 692 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில்,எட்டுமனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன.
வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர், பேரூர் செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.