/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,874 மனுக்கள் ஏற்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,874 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 27, 2025 08:23 PM
காஞ்சிபுரம்:முத்தியால்பேட்டை, ராஜகுளம், அங்கம்பாக்கம் கிராமங்களில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 1,874 மனுக்கள் பெறப்பட்டன.
முத்தியால்பேட்டை கிராமத்தில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு ஊராட்சி தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உத்திமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி 550 மனுக்கள் பெறப்பட்டன. இதில், முத்தியால்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணை சேர்மன் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல, ராஜகுளம் பகுதியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கு, இலுப்பப்பட்டு ஊராட்சி தலைவர் சுகுணா தலைமை வகித்தார்.
வாலாஜாபாத் ஒன்றியக் குழு தி.மு.க.,- சேர்மன் தேவேந்திரன், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, 372 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், அங்கம்பாக்கம் கிராமத்தில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில், 952 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மூன்று முகாம்களில், 1,874 மனுக்கள் பெறப்பட்டன.