/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தின் நடுவே ஸ்டாலின் குரல் ஒலித்ததால் கவனம் ஈர்ப்பு

ADDED : டிச 05, 2025 06:26 AM

காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை, காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு ஊழியர்கள் ஸ்பீக்கரி ல் போட்டு ஒலிபரப்பு செய்தது, பலரின் கவனத்தை ஈர்த்தது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்புதல்; கருணை அடிப்படையிலான பணி நியமனம் 25 சதவீதமாக பழையபடி மாற்றுதல் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற தமிழக அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில், நேற்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர், 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற முழக்கங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடந்தபோது, தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை, அரசு ஊழியர்கள் ஸ்பீக்கரில் போட்டு ஒலிபரப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் நடுவே முதல்வர் ஸ்டாலின் குரல் ஒலித்ததால், அவ்வழியே செல்வோரின் கவனத்தை ஈர்த்தது. போலீசாருக்கும் இந்த சம்பவம் ஆச்சரியத்தை அளித்தது.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.