/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில வில் வித்தை போட்டி சென்னை வீராங்கனை தங்கம்
/
மாநில வில் வித்தை போட்டி சென்னை வீராங்கனை தங்கம்
மாநில வில் வித்தை போட்டி சென்னை வீராங்கனை தங்கம்
மாநில வில் வித்தை போட்டி சென்னை வீராங்கனை தங்கம்
ADDED : நவ 19, 2025 04:36 AM

சென்னை: சென்னையில் நடந்த மாநில வில் வித்தை போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நேஹாஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு வில் வித்தை சங்கம் சார்பில், மாநில அளவிலான வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் உள்ள ஸ்ரீசாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த, 80-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதன் மகளிர் சீனியர் காம்பவுண்ட் பிரிவில், மேடவாக்கத்தைச் சேர்ந்த நேஹாஸ்ரீ, 15; அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மேலும், இதே போட்டியில் நடந்த தேசிய போட்டிக்கான தகுதிச்சுற்றின் சீனியர் மற்றும் ஜூனியர் காம்பவுண்ட் பிரிவுகளில் முதலிடம் பிடித்து, தேசிய போட்டியில் தமிழக அணிக்காகப் போட்டியிடும் தகுதியையும் பெற்று உள்ளார்.

