/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்
/
மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்
மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்
மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்
ADDED : ஆக 19, 2025 12:36 AM

காஞ்சிபுரம், மாநில அளவிலான கராத்தே போட்டியில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் கோப்பையை வென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துாசி கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நேற்று முன்தினம் நடந்தது. உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், கட்டா, குமித்தே உள்ளிட்ட பல்வேறு பிரிவு போட்டிகளில் எட்டு மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது.
இதில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் 60 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
இதில், 22 மாணவர்கள் முதல் இடம்; 14 மாணவர்கள் இரண்டாம் இடம்; 11 மாணவர்கள் மூன்றாவது இடம் என, பெரும்பான்மையான போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஒட்டு மொத்த கோப்பையை வென்றனர்.