/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மாநில விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : செப் 07, 2025 01:55 AM

காஞ்சிபுரம்:மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு, அவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காஞ்சிபுரத்தில் நடந்தது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், 182 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 17 வயதிற்குட்பட்ட வாலிபால் போட்டியில், அவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
மாநில அளவில் நடைபெறவிருக்கும் வாலிபால் போட்டிக்கு, அவளூர் அரசு பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
இவர்களுக்கு, அவளூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.