/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
வாலாஜாபாத் சிவன்படை வீதியில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
/
வாலாஜாபாத் சிவன்படை வீதியில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
வாலாஜாபாத் சிவன்படை வீதியில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
வாலாஜாபாத் சிவன்படை வீதியில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

வாலாஜாபாத்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, வாலாஜாபாத், சிவன்படை வீதியில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கப்பட்டன.
வாலாஜாபாத் பேரூராட்சி, 12வது வார்டில் சிவன்படை வீதி உள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி பொது நிதியின் கீழ், இத்தெருவில் 12 லட்சம் ரூபாய் செலவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படுகிறது.
இத்தெரு முனையில் உள்ள பி.கே.செட்டித்தெருவையொட்டி, சிறப்பு திட்டத்தின்கீழ் சிறு பாலம் அமைக்க, 1.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இப்பணிகளை மேற்கொள்ள, சிவன்படை வீதியில் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு, சில நாட்களாக பணி துவங்காத நிலை இருந்தது.
இதனால், சிவன்படை வீதி மற்றும் சுற்றி உள்ள தெரு மக்கள், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலைக்கு நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல வழி இல்லாமல், மாற்று வழிகளில் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வாலாஜாபாத் பேரூராட்சி சார்பில், சிவன்படை வீதியில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கின.

