/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்புலிவனத்தில் தெரு நாய் தொல்லை
/
திருப்புலிவனத்தில் தெரு நாய் தொல்லை
ADDED : ஜன 18, 2026 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்லும் பலரை, தெரு நாய்கள் துரத்துவதால் கவனம் சிதறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிக்கு செல்லும் மாணவ -- மாணவியரை நாய்கள் கடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
எனவே, திருப்புலிவனம் தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

