/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெருவோர கடைக்காரர்கள் கடன் பெறலாம்: எஸ்.பி.ஐ.,
/
தெருவோர கடைக்காரர்கள் கடன் பெறலாம்: எஸ்.பி.ஐ.,
ADDED : பிப் 17, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் தனியார் திருமண மண்டபத்தில், எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், நெசவாளர்களுக்கு கடன் வழங்கும் மேளா நடந்தது. இந்த மேளாவிற்கு, முதன்மை மேலாளர் ரவிரஞ்சன் தலைமை வகித்தார்.
துணைமேலாளர் ஆஷித் ரஞ்சன் சின்ஹாசிறப்பு விருந்தினராக பங்கேற்று, 192 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார்.
அதன்பின், அவர் பேசியதாவது:
நெசவாளர்களுக்கு கடன் வழங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், தெருவோர கடைக்காரர்கள் பயன்பெறும் வகையில், 10,000 - 50,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.