/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆட்டோவில் ஏற்பட்ட தகராறு கீழே விழுந்த மாணவி பலி
/
ஆட்டோவில் ஏற்பட்ட தகராறு கீழே விழுந்த மாணவி பலி
ADDED : ஏப் 02, 2025 08:54 PM
மணிமங்கலம்:படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர், 20. மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இறுதியாண்டு படித்து வந்தார். மார்ச் 29ம் தேதி, தன்னுடன் படிக்கும் மூன்று மாணவியருடன் சேர்ந்து, கரசங்காலில் இருந்து ஷேர் ஆட்டோவில் கல்லுாரிக்கு சென்றார்.
ஆட்டோ சிறிது துாரம் சென்றதும், இரண்டு பெண்கள் ஏறினர். அதில் ஒருவர், ஜெனிபரை மேலே ஏறி அமரும்படி கூறியதாகவும், அதற்கு ஜெனிபர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு, அப்பெண் ஓட்டுனரின் அருகில் அமர்ந்தபடி பயணித்துள்ளார். அப்போது ஜெனிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் ஓடும் ஆட்டோவில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த ஜெனிபர், தலையில் காயமடைந்து மயக்கமடைந்தார். அவரை, அதே ஆட்டோவில் ஏற்றி, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

