நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் கிராமம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 46; இவரது மனைவி நந்தினி, தம்பதிக்கு பிரதிஷா, 15 மற்றும் சுனில் என்ற மகனும் உள்ளனர்.
பிரதிஷா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரதிஷா, நீண்ட நேரமாக மொபைல் போன் பார்த்துக் கொண்டு இருந்ததால், ஆத்திரமடைந்த தாய் நந்தினி, மொபைல் போனை வைத்துவிட்டு படி எனக் கூறி கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவி பிரதிஷா, வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

