sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஐடிஐகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்

/

ஐடிஐகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்

ஐடிஐகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்

ஐடிஐகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்


ADDED : மே 27, 2025 07:37 PM

Google News

ADDED : மே 27, 2025 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஐ.டி.ஐ.களில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான, 'ஆன்லைன்' கலந்தாய்வு வாயிலாக நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்பெறும் வகையில் விண்ணப்பிப்பது தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு செய்யவும் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக பதிவு செய்ய ஜூன் 13 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 94449 08701, 94459 43451, 90922 80324 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us