/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யோகா, வில் வித்தையில் மாணவ - மாணவியர் அசத்தல்
/
யோகா, வில் வித்தையில் மாணவ - மாணவியர் அசத்தல்
ADDED : செப் 01, 2025 02:15 AM

வாலாஜாபாத்:புளியம்பாக்கத்தில் மனம் மற்றும் உடலை மேம்படுத்தும் வகையில் யோகா, சிலம்பம் மற்றும் வில் வித்தை மூலம் மாணவர்கள் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.
வாலாஜாபாத் எல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் யோகா, சிலம்பம் பயின்று வரும் 250 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இம்மாணவ - மாணவியர் கண்களை கட்டிய நிலையில் யோகாவில் தொடர்ச்சியாக 30 நிமிடம் சேதுபந்தாசனம், சிலம்பத்தில் 30 நிமிடம் மற்றும் கண்களை திறந்தநிலையில் வில் வித்தையில், 30 நிமிடம் தொடர்ந்து அம்பு எய்தி அசத்தினர்.
உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்த யோகாவும், தற்காப்பு கலைக்கு சிலம்பமும், இலக்கு களை தாக்கும் விளையாட்டாக வில் வித்தையும் உள்ளதாக, இவ்வாறான பயிற்சிகள் மூலம் மன அழுத்தம் குறையும் என, இந்நிகழ்ச்சியின்போது மாணவ - மாணவியருக்கு பயிற்றுநர்கள் அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப் பட்டன.