/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி மாணவர்கள் ஆபத்தான பயணம்
/
பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி மாணவர்கள் ஆபத்தான பயணம்
பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி மாணவர்கள் ஆபத்தான பயணம்
பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி மாணவர்கள் ஆபத்தான பயணம்
ADDED : ஏப் 10, 2025 01:18 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு தினமும், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை பயன்படுத்தி, மாகரல், வெங்கச்சேரி, மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட பயணியர், உத்திரமேரூக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து, தினமும் காலை நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில், மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது போன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க, போக்குவரத்து துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி விபத்து ஏற்படுவதை தடுக்க, படிக்கட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவை ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.
தானியங்கி படிக்கட்டு கதவு இல்லாத பேருந்துகளில், புதிதாக கதவை பொருத்தி அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

