தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளி ஆண்டு விழாவில் மாணவ - மாணவியர் கவுரவிப்பு

 பள்ளி ஆண்டு விழாவில் மாணவ - மாணவியர் கவுரவிப்பு

 பள்ளி ஆண்டு விழாவில் மாணவ - மாணவியர் கவுரவிப்பு


ADDED : மார் 15, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்:இளநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழாவில், புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியர் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், இளநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிக்கான ஆண்டு விழா அப்பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது.

இதில், உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் நாராயணசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஷ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டு விழாவில் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலை நகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியர் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியர் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவின் நிறைவாக அப்பள்ளியில், 2026- - 27ம் கல்வி ஆண்டிற்கு புதியதாக சேர்ந்த மாணவ - மாணவியர் மாலை, கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது அரசு பள்ளியில் மாணவ - மாணவியரின் சேர்க்கை அதிகப்படுத்த பெற்றோர் ஒத்துழைக்குமாறு ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us