ADDED : மார் 28, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
திருத்தணி:சென்னை சென்டரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக ஹூப்ளி அதிவேக விரைவு ரயில் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த விரைவு ரயில் நேற்று மாலை, 3:50 மணிக்கு சென்னை சென்டரலில் இருந்து புறப்பட்டு, மாலை 5:30 மணிக்கு திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள இரண்டாவது தானியங்கி ரயில்வே கேட்டை கடந்தது. அப்போது, ரயிலில் பயணித்த கல்லுாரி பெண்ணுடன் சேர்ந்து வாலிபரும், திடீரென விரைவு ரயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
திடீரென ரயில் நின்றதால், பயணியர் பீதியடைந்தனர். அப்போது கல்லுாரி பெண், வாலிபருடன் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றார். இதனால், ஐந்து நிமிடம் நடுவழியில் விரைவு ரயில் நின்று சென்றது.
