sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி நேரத்திற்கு முன்பாக இயங்கும் அரசு பேருந்தால் மாணவர்கள் அவதி

/

பள்ளி நேரத்திற்கு முன்பாக இயங்கும் அரசு பேருந்தால் மாணவர்கள் அவதி

பள்ளி நேரத்திற்கு முன்பாக இயங்கும் அரசு பேருந்தால் மாணவர்கள் அவதி

பள்ளி நேரத்திற்கு முன்பாக இயங்கும் அரசு பேருந்தால் மாணவர்கள் அவதி


ADDED : ஜூலை 26, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் வழியாக அரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்து

மாலையில் பள்ளி நேரத்திற்கு முன்பாக இயக்குவதால் போக்குவரத்திற்கு மாணவ, மாணவியர்

பலரும் அவதிபடுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் மற்றும் அரும்புலியூர் வழியாக செங்கல்பட்டு வரை தடம் எண்; 580 என்ற அரசுப் பேருந்து இயங்குகிறது.

திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேரி, அரும்புலியூர், கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர் இப்பேருந்து மூலம் பயணித்து வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்விகூடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இப்பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து, மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது.

இதனிடையே, வாலாஜாபாத் கல்வி கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியர் வகுப்பு முடித்து மாலை 4:10 மணிக்கு பிறகே வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகின்றனர்.

ஆனால், பேருந்து மாலை 4:00 மணிக்குள்ளாகவே வாலாஜாபாத்தை கடந்து விடுகிறது.

இதனால், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேரி, சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் அப்பேருந்து மூலம் பயணித்து வீடு திரும்ப இயலாத நிலை உள்ளது.

மேலும், இப்பேருந்தை தவறவிட்டால் அரும்புலியூர் சுற்று வட்டார பகுதிக்கு மாலை 6:10 மணிக்கு தான் அடுத்த பேருந்து என்பதால் மாணவர்கள் 2 மணி நேரத்திற்கு காத்திருக்க வேண்டி உள்ளது.

எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் மற்றும் பல்வேறு கிராமங்கள் வழியாக செங்கல்பட்டு வரை இயங்கும் அரசு பேருந்தை வாலாஜாபாத்திற்கு மாலை 4:20 மணிக்கு வந்தடையும் வகையில் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us