/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பில்லாத பள்ளி வளாகம் மாணவ - மாணவியர் அவதி
/
பராமரிப்பில்லாத பள்ளி வளாகம் மாணவ - மாணவியர் அவதி
ADDED : செப் 30, 2025 01:38 AM

ஸ்ரீபெரும்புதுார்;மாகாணியம் ஊராட்சி, அழகூர் அரசு தொடக்கப் பள்ளி வளாகம் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து உள்ளதால், மாணவ -- மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாகாணியம் ஊராட் சிக்குட்பட்ட அழகூர் அரசு தொடக்கப் ப ள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ள வளாகம் முழுதும் செடிகள் வளர்ந்து உள்ளன.
மழை பெய்யும் போது, வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவ - மாணவியர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல, பள்ளி வளாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், அங்குள்ள சறுக்கு மரம், ஊஞ்சல் ஆகியவற்றை, பள்ளி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, அழகூர் அரசு தொடக்கப் பள்ளி வளா கத்தில் உள்ள செடிகளை அகற்றி சமன் படுத்த வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.