ADDED : அக் 01, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியராக சரவணக் கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, இவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஷ்ரப் அலி என்பவர், 15 நாட்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இவர், ஸ்ரீபெரும்புதுாரில் பணியில் சேரவில்லை. இதைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியராக சரவணக் கண்ணன் தொடர்கிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஷ்ரப் அலியை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், சப் - -கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.