தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ துணை அஞ்சலகம் செவிலிமேடில் திறப்பு

 துணை அஞ்சலகம் செவிலிமேடில் திறப்பு

 துணை அஞ்சலகம் செவிலிமேடில் திறப்பு


ADDED : டிச 11, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: செவிலிமேடு பகுதியில், துணை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த, செவிலிமேடு பகுதியில், கிளை அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்தது.

அஞ்சல் சேவை நலன் கருதி, கிளை நிலையம், துணை அஞ்சல் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, 631 501 சின்ன காஞ்சிபுரம்; 631 502 பெரிய காஞ்சிபுரம் ஆகிய அஞ்சல் குறியீட்டுடன் அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது, செவிலிமேடு கிளை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து, துணை அஞ்சல் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால், 631 503 என்கிற அஞ்சல் குறியீட்டுடன் இந்த அலுவலகம் இயங்க உள்ளது.

இந்த, செவிலிமேடு துணை அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், அய்யங்கார்குளம், மேல்கதிர்பூர், ஓரிக்கை, களக்காட்டூர், பெருமாநல்லுார் ஆகிய கிளை அஞ்சலகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மேற்கண்ட புதிய எண்ணை அஞ்சல் குறியீடாக பயன்படுத்தலாம் என, அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் அருள்தாஸ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us