/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதடைந்த கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
/
பழுதடைந்த கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
ADDED : ஜன 27, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், இடையாம்புதுாரில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து மழைக்காலத்தில் நீர் சொட்டுகிறது.
மேலும், கட்டடப் பகுதி ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் நிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள சேவை மைய கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் இயங்குகிறது.
எனவே, இடையாம்புதுார் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.