/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரசங்காலில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்
/
கரசங்காலில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்
ADDED : ஜன 13, 2024 12:32 AM

குன்றத்துார்:
கரசங்கால் ஊராட்சியில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில், கரசங்கால் ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு, 2022ம் ஆண்டு 15வது மத்திய நிதிக் குழு திட்டத்தின் கீழ், 35.92 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடம் திறப்பு விழா கண்டு, இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது.
எனவே, இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.