ADDED : பிப் 29, 2024 12:50 AM
காஞ்சிபுரம்:அரிசி ஆலைகளின் கருப்பு உமி வெளியேற்றுவதால், கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது என, முதல்வர் தனிப்பிரிவுக்கு, நகர் மக்கள் மனு அளித்துள்ளனர்.
சிறுகாவேரிபாக்கம் சத்தியநாராயண நகர், அன்பு நகர் ஆகிய பகுதியினர், முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவில் கூறியதாவது:
சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில், அதிக அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த அரிசி ஆலைகளில் உள்ள புகை போக்கி வழியாக, இரவு நேரங்களில் கருப்பு உமியை வெளியேற்றுகின்றனர்.
இந்த கருப்பு உமி காற்றில் கலந்து, வாகன ஓட்டிகள், குடியிருப்புகளில் வசிக்கும் வயதானவர்கள், குழந்தைகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
இதனால், சத்தியநாராயண நகர், அன்பு நகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
எனவே, சிறுகாவேரிபாக்கம் பகுதியில் காற்று மாசு குறைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

