/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோமங்கலத்தில் மின்தடை அடிக்கடி தொடர்வதால் அவதி
/
சோமங்கலத்தில் மின்தடை அடிக்கடி தொடர்வதால் அவதி
ADDED : அக் 22, 2024 07:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் பகுதியில், துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வரதராஜபுரம், எருமையூர், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம், நந்தம்பாக்கம், சோமங்கலம், அமரம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோமங்கலம் பகுதிகளில், சிறு மழை பெய்தாலே மின் தடை ஏற்படுகிறது.
பகல், இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.