/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்டும் குழியுமான சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி
/
குண்டும் குழியுமான சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி
குண்டும் குழியுமான சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி
குண்டும் குழியுமான சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி
ADDED : மே 23, 2025 01:39 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட முத்து மாரி அம்மன் கோவில் தெருவில், 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, கான்கிரீட் சாலை, சேதமடைந்துகுண்டும் குழியுமாகஉள்ளது.
தவிர, இந்த சாலையோரம் வடிகால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும்கழிவுநீர், மழைநீருடன் கலந்து, சாலையில் தேங்கி நிற்கிறது.
மேலும், மழைகாலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, முத்துமாரிஅம்மன் கோவில் தெருவில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி, சேதமான கான்கிரீட் சாலையைசீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சிஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.