/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் வரும் 4ல் சுந்தர வரதர் பிரம்மோத்சவம்
/
உத்திரமேரூரில் வரும் 4ல் சுந்தர வரதர் பிரம்மோத்சவம்
உத்திரமேரூரில் வரும் 4ல் சுந்தர வரதர் பிரம்மோத்சவம்
உத்திரமேரூரில் வரும் 4ல் சுந்தர வரதர் பிரம்மோத்சவம்
ADDED : ஏப் 22, 2025 11:40 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயகி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்சவம் வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
அதில், வரும் மே 13ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களும், பெருமாள் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிம்ம வாகனம், சந்திர பிரபை, யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதியுலா நடக்க உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 6ம் தேதி, கருட சேவையும், 10ம் தேதி, திருத்தேரோட்டமும், 12ம் தேதி, தீர்த்தவாரி ஆகிய நிகழ்வுகள் நடக்க உள்ளன.